ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.99 ஆயிரம் திருட்டு
ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.99 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி
ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.99 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.99 ஆயிரம் திருட்டு
ஆரணி காந்தி ரோடு அருகே உள்ள சந்திரகுள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். நகராட்சியில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 28).
இவரும் இவரது அக்கா அமுதா இருவரும் இன்று பகலில் தச்சூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.99 ஆயிரம் எடுத்தனர்.
பின்னர் அதனை தனது ஸ்கூட்டரில் வைத்துவிட்டு ஓட்டி சென்றனர். வழியில் ஒரு டீக்கடையில் இருவரும் டீ சாப்பிட ஸ்கூட்டரை வெளியில் விட்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்து பார்க்கும்போது ஸ்கூட்டர் சற்று தொலைவில் இருந்தது. மேலும் ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.99 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் பணத்ைத திருடி சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர்கள் உடனடியாக அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்கூட்டர் எடுத்துச் சென்றது முதல் டீ சாப்பிட்ட இடம் வரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பணம் திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.