மளிகை கடையில் ரூ.4 லட்சம் திருட்டு


மளிகை கடையில் ரூ.4 லட்சம் திருட்டு
x

நாமக்கல் மளிகை கடையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ.4 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

மளிகை கடை

நாமக்கல் மாருதிநகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் அருகில் வெற்றிவேல் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெற்றிவேல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பணம் வைத்திருந்த பெட்டியை பார்த்தபோது, அதில் இருந்த சுமார் ரூ.4 லட்சம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.4 லட்சம் திருட்டு

இது குறித்து அவர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் மளிகை கடையில் ரூ.4 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டும் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story