மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.5½ லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.5½ லட்சம் திருட்டு
x

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.5½ லட்சம் திருட்டுபோனது.

திருச்சி

மணப்பாறை:

புதுக்கோட்டை மாவட்டம், மீனவேலி பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது 36). இவர் செல்லம்பட்டியை சேர்ந்த ஒப்பந்ததாரரான சாமிதுரை(32) என்பவருக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து நேற்று மதியம் மணப்பாறையில் உள்ள வங்கி ஒன்றில் சாமிதுரை, ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து வினோத்திடம் கொடுத்துள்ளார்.

பின்னர் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் முன் பக்க கவரில் அந்த பணத்தை வைத்துக்கொண்டு மணப்பாறை மதுரை சாலையில் உள்ள ஒரு தனியார் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற அவர்கள், பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கவரில் இருந்த பணத்தை காணவில்லை. இதனால் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்ததும், அதில் ஒருவர் மட்டும் தலையில் தொப்பி அணிந்து கொண்டு அவசர அவசரமாக வந்து, மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடியதும், அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணப்பாறையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story