7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூரில் கடந்த ஏப்ரல் மாதம் கோடாரங்குளத்தை சேர்ந்த சிவராமன் (வயது 25) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோடாரங்குளத்தை சேர்ந்த இசக்கிபாண்டியன் (36), வைத்திலிங்கம் என்ற ராசு (47), உலகநாதன் என்ற சங்கர் (28), மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் என்ற ராசு (33), அம்பாசமுத்திரம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் என்ற வெங்கடேஷ் (37), பிரம்மதேசம் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்த முருகன் என்ற கீர்த்தி (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு பரிந்துரை செய்தார். அவர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 6 பேரும் குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கான ஆவணங்கள் சிறையில் வழங்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்

இதே போல் அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஆதிகணேஷ் (23) என்பவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story