நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி
திருச்சி அரியமங்கலம் திடீர்நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போனதாக பெறப்பட்ட புகாரின்பேரில், அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதேபகுதியை சேர்ந்த ரவுடி கணேஷ் என்கிற திடீர்நகர் கணேஷ் (வயது 22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் திடீர்நகர் கணேஷ் மீது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கும், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும், வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடியதாக ஒரு வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கணேஷிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story