முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் கைதான  3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சேலம்

சேலம்,

கொங்கணாபுரம் அருகே உள்ள கோணசமுத்திரம் கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 60), முன்னாள் ஊராட்சி தலைவரான இவர் கடந்த மாதம் 27-ந் தேதி நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி (50), மணிகண்டன் (30), சேட்டு (28) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த கொலையில் கைதான 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து நல்லதம்பி, மணிகண்டன், சேட்டு ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.


Next Story