கொலை, திருட்டு வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை, திருட்டு வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலம்,
சேலம் கருமலைக்கூடல் குப்பண்ணகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் லல்லு பிரசாத் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் வெள்ளையன் (25). இவர்கள் இருவரையும் கருமலைக்கூடல் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் மகன் ராஜ்குமார் (27). இவர் நாமக்கல் மற்றும் சேலம், சங்ககிரி பகுதியில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சங்ககிரி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கொலை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள 3 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.