5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி செம்பத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் கடந்த 15-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துமீனம்மாள்புரம் பகுதியை சேர்ந்த வினோத் (27), மூைலக்கரைப்பட்டியை சேர்ந்த கதிரவன் (33), வீரவநல்லூரை சேர்ந்த ஆசைதம்பி (28), அலெக்ஸ்குமார் என்ற அலெக்ஸ் (25), பத்தமடையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (23) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதை ஏற்று கலெக்டர் விஷ்ணு, 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழங்கினார்.


Next Story