கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர்
அப்போது அந்த பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாக படித்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் முந்திரி தோப்புக்கு அழைத்து சென்று தனது நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த வழக்கு தொடர்பாக குருங்குளம் மேற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன் (வயது22), அவரது நண்பர்கள் சாமிநாதன் (30), சுகுமாறன் (23), கண்ணன் (31) ஆகிய 4 பேரையும் வல்லம் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.