காவலாளியை தாக்கி பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காவலாளியை தாக்கி பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஒரு வீட்டிற்குள் புகுந்து காவலாளியை மண்வெட்டியால் தாக்கி, அவரது மனைவியிடம் கத்தி முனையில் 4 கிராம் தோடு, ரூ.10 ஆயிரம், செல்போன் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விமல் என்ற விமல்ராஜை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் விமல்ராஜ் மீது ஏற்கனவே முன்விரோதத்தால் ஆட்டோவை அடித்து நொறுக்கிய வழக்கும், ஸ்ரீரங்கம் ரெயில் நிலைய நடைமேடையில் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு உள்பட 5் வழக்குகளும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் விமல்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விமல்ராஜிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.