டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி


டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
x

கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே கொழுந்தம்பட்டு கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.

ராதாபுரம் -கீழ்வணக்கம்பாடி இணைப்பு சாலை அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் டிராக்டர் ஓட்டி வந்த பழைய மல்லவாடி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 45) என்பவர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story