டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி


டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 10 Jan 2023 7:21 PM GMT (Updated: 2023-01-11T12:40:43+05:30)

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

டிரைவர்

அரியலூர் மாவட்டம், வடக்கு சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் சுகந்தராஜ்(வயது 21). டிரைவரான இவர் வாழைக்குழி கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில், டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அந்த தோட்டத்தில் புல் வெட்டும் பணியின்போது டிராக்டரை பயன்படுத்தியுள்ளனர். அப்போது ஒரு டிராக்டர் பள்ளத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த டிராக்டரை மீட்க, சுகந்தராஜ் இயக்கிய மற்றொரு டிராக்டரால் இழுத்துள்ளனர்.

சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டிராக்டர் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுகந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், அங்கு சென்று சுகந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story