அரசுப்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி


அரசுப்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி
x

மடத்துக்குளம் அருகே அரசுப்பள்ளிக்கு அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றியை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே அரசுப்பள்ளிக்கு அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றியை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டு கட்டிடம்

மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிப்பட்டினம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.பழைய ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.மேலும் பள்ளி கட்டிடத்துக்கு மிக அருகில் மின்மாற்றி(டிரான்ஸ் பார்மர்) ஒன்று உள்ளது.இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.குறிப்பாக மழைக்காலங்களில் குழந்தைகள் இந்த மின் மாற்றி அருகில் ஆபத்தை உணராமல் விளையாடும் நிலை உள்ளது.

அலட்சியம்

மின் மாற்றியின் கம்பங்கள் விரிசல் விட்ட நிலையில் உள்ளது. இங்கு மின் மாற்றி உள்ளதால் இந்த பகுதியை சுத்தம் செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் புதர் மண்டிக் காணப்படுவதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வரும் அபாயம் உள்ளது. இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதால் இந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்கும் நிலை உள்ளது. மின் மாற்றியை பள்ளி அருகிலிருந்து அகற்றக் கோரி துங்காவி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான செலவினங்களை செலுத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்த போதும் மின்மாற்றியை அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருவதாக ஊராட்சியினர் தெரிவித்துள்ளனர். எனவே விபத்துக்கள் நடைபெறும் முன், மின் மாற்றியை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிக்கு சுற்றுச் சுவருடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



Next Story