மரக்கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது


மரக்கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது
x

மரக்கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் மருதம் நகரில் வசித்து வருபவர் முப்புடாதி (வயது 72). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நேற்று அதிகாலை இவரது வீட்டின் அருகே இருந்த மருத மரத்தின் கிளை திடீரென முறிந்து வீட்டின் மாடியில் விழுந்தது. மரக்கிளை விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து சரி செய்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மரக்கிளையை அகற்றினார்கள்.


Next Story