சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்தன
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்தன.
பெரம்பலூர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை பெய்யும்போது சூறைக் காற்றும் வீசியதால் பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் சில மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சில மரங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் காற்றில் சாய்ந்து விழுந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம்-31, பாடாலூர்-4, அகரம்சீகூர்-32, லெப்பைக்குடிகாடு-23, புதுவேட்டக்குடி-21, பெரம்பலூர்-67, கிருஷ்ணாபுரம்-5, தழுதாழை-3, வேப்பந்தட்டை-5.
Related Tags :
Next Story