குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது


குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது
x

சங்கராபுரத்தில் குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கராபுரம் அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதற்கு உதவி தலைமையாசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகளுக்கான கால்பந்து, ஆக்கி, கைப்பந்து, கபாடி, கூடைப்பந்து, கோ-கோ, சதுரங்கம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story