திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு
x

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு நேற்று காலை ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. திம்பம் மலைப்பாதையின் 27 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, லாரி பழுதாகி நின்றுவிட்டது. இதனால் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. மலைப்பாதையின் இருபுறமும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதன்பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. அதன்பிறகே சுமார் 1 மணி நேர போக்குவரத்து பாதிப்புக்கு பிறகு வாகனங்கள் செல்லத்தொடங்கின.

Next Story