பள்ளி மாணவியை கடத்திய லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவியை கடத்திய லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x

பெண்ணாடம் அருகே பள்ளி மாணவியை கடத்திய லாரி டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள திருமலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் ரஞ்சித் (வயது 30), லாரி டிரைவர். திருமணமான இவர் சம்பவத்தன்று பக்கத்து கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்த 14 வயதான மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதகுறித்து மாணவியின் தந்தை பெண்ணாடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு கடலூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story