டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்தது


டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்தது
x

டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்தது.

புதுக்கோட்டை

மணமேல்குடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவுது (வயது 30). இவர் மீமிசல் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு தனது கடையை பூட்டி சென்றார். இந்தநிலையில், நேற்று அதிகாலை பட்டுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மீன் ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டைல்ஸ் கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான டைல்ஸ் பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து அதிகாலையில் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story