பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது
பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது
காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஆனந்தி. இவருக்கு சொந்தமான லாரி கடந்த 17-ந்தேதி இரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து பேப்பர் ஆலைக்கு மூல பொருட்களை ஏற்றிக்கொண்டு கரூருக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை நீதிராஜன் என்பவர் ஓட்டிச்சென்றார். லாரி தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாப்பேட்டை அருகே பூண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் ஏற்றிச்சென்ற பொருட்கள் சிதறி கீழே கொட்டியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து கீழே சிதறிய பொருட்கள் பொக்லின் மூலம் வேறு லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.