லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
திருச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முட்டைகோஸ் காய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை ஒசூர் அருகே உள்ள தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த அப்பாசாமி மகன் தீனா (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே கிளியநல்லூர் என்ற இடத்தில் திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் தீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story