லாரி, குளத்தில் கவிழ்ந்தது


லாரி, குளத்தில் கவிழ்ந்தது
x

நெல்லை-அம்பை சாலையில் சிமெண்டு கலவையுடன் சென்ற லாரி, குளத்தில் கவிழ்ந்தது

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து, அம்பையில் நடந்த கட்டுமான பணிக்காக சிமெண்டு கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரி நேற்று காலையில் நெல்லையில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பிராஞ்சேரி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே பஸ் வந்ததால் லாரியின் டிரைவர் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story