மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும்


மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும்
x

மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சி அலுவலகத்துக்கு முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பொள்ளாச்சி, ரொட்டிக்கடை, அய்யர்பாடி, கவர்க்கல், சக்தி, தலநார், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, ஆழியாறு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்லும். பயணிகளின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நகராட்சி அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்காக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும், மாற்று இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. வால்பாறை பகுதியில் தற்போது மாலையில் மழை பெய்து வருகிறது. மேலும் பகலில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் நிழற்குடை இன்றி பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story