ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம்
ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்தார்.
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பெரப்பேரி ஊராட்சியில் நீண்ட நாட்களாக சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். அதன்பேரில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், துணைத்தலைவர் சுமதி ஐயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story