விழுப்புரம் மாவட்டத்தில்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்ஃ

விழுப்புரம்


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் ராஜகுருநாத் பிரபு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் கணக்கெடுப்பு பணியின் தினசரி புள்ளி விவரத்தை ஒப்படைக்கவில்லை என்று அவரை அம்மாவட்ட கலெக்டர், தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

எனவே அவருக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், விருதுநகர் மாவட்ட கலெக்டரை கண்டித்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்கள் முன்பு மதிய உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story