வேன் மோதியது; மோட்டார்சைக்கிளில் சென்றவர் சாவு
வேன் மோதி மோட்டார்சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆவரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 60). இவர் ஆர்.எஸ்.மங்கலம் ரவி தியேட்டர் அருகே ஆவின் பால்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று மகாலிங்கம் தனது பேட்டரி மோட்டார்சைக்கிளில் டி.டி. மெயின் ரோட்டில் சென்றபோது பின்புறமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த திருஞானம்(33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story