வேன் டிரைவர் அரிவாளால் வெட்டிக் கொலை


வேன் டிரைவர் அரிவாளால் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 21 Aug 2023 3:00 AM IST (Updated: 21 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு பொருட்களை வாங்கியதை கண்டித்ததால் வேன் டிரைவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த பழைய இரும்புக் கடை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்
பெ.நா.பாளையம்


திருட்டு பொருட்களை வாங்கியதை கண்டித்ததால் வேன் டிரைவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த பழைய இரும்புக் கடை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


வேன் டிரைவர்


கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 56). டிரைவர்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் திருவள்ளு வர் நகரில் தங்கி பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்க ளை வாங்கி விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இவரிடம் வேன் டிரைவராக ரவி வேலை பார்த்து வந்தார்.


இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்வராஜ், வாடிக்கையாளர் ஒருவரிடம் திருட்டுப் பொருட்களை வாங்கிய தாக கூறப்படுகிறது. அதை ரவி கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், நீ உனது வேலையை மட்டும் பார். இது பற்றி யாரிடமும் கூறாதே என்று எச்சரித்து உள்ளார்.


அரிவாளால் வெட்டி கொலை


இதனால் கவலை அடைந்த ரவி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் கூறி உள்ளார். அவர்கள் ஆறுதல் கூறி உள் ளனர். நேற்று முன்தினம் ரவி கடையில் இருந்த போது செல்வ ராஜ் திருட்டுப் பொருட்களை வாங்கியதாக தெரிகிறது. இதை ரவி கண்டித்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், ரவியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ரவி, கடைக்கு பின்புறம் உள்ள ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத செல்வராஜ், அங்கு சென்று மீண்டும் தகராறு செய்து ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.


வலைவீச்சு


இதற்கிடையே வேலைக்கு சென்ற ரவி, வீட்டிற்கு செல்லாததால் அவருடைய மகன் நந்தகுமார் கடைக்கு சென்றார். அங்கு ரவி கொலை செய்யப்பட்டதை அறிந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.


அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப் -இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செல்வராஜை வலைவீசி தேடி வருகிறார்கள்.



Next Story