முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த வேன் பஞ்சரானதால் பரபரப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த வேன் பஞ்சரானதால் பரபரப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த வேன் பஞ்சரானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

வேளாண் கண்காட்சி

திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம்-2023 விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேளாண் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார். இதையடுத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழா முடிந்ததும் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காலை 11 மணிக்கு கேர் கல்லூரியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் வழியாக தஞ்சை நோக்கி சென்றார்.

டயர் பஞ்சர்

துவாக்குடி பஸ் நிலையம் அருகே வந்தபோது முதல்-அமைச்சர் பயணம் செய்த வேனின் பின்புற டயர் ஒன்று பஞ்சரானது. இதையடுத்து அந்த வேன் நிறுத்தப்பட்டது. உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வேனுக்கு பின்னால் வந்த மாற்று வாகனத்தில் ஏறி, தஞ்சைக்கு சென்றார். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு மாற்று டயர் பொருத்தப்பட்டு அந்த வேன் தஞ்சாவூருக்கு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story