வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 2,640 லிட்டர் பால் வீணானது
வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 2,640 லிட்டர் பால் வீணானது.
பெரம்பலூர்
பெரம்பலூர் ஆவின் நிறுவனத்திற்கு கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்து கொண்டு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர்-ஆத்தூர் சாலைக்கு வருவதற்காக சோமண்டாபுதூர் பிரிவு ரோடு அருகே மலைபாதையில் பால் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வேனில் இருந்த 66 கேன்களில் இருந்த தலா 40 லிட்டர் வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 640 லிட்டர் பால் தரையில் கொட்டி ஆறு போல் ஓடியது. இதையடுத்து வேன் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story