சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தினால் போக்குவரத்து இடையூறு
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தினால் போக்குவரத்து இடையூறு
வீரபாண்டி
திருப்பூர் பகுதியில் மங்கலம் சாலை முக்கிய பங்கு வைத்து வருகிறது. மங்கலம் சாலை வழியாக கோயம்புத்தூர் மற்றும் மற்ற பகுதிகளுக்கு அதிக வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மங்கலம் சாலையில் போதிய சாலை வசதி இல்லாததால் அவ்வப்போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் மங்களம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில், சாலையோரம் வாகனங்கள் சிலர் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு வாகனங்கள் ஒன்றோடு மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. அவ்வழியாக நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இது போன்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தக்கூடிய வாகனங்கள் மீது போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.