வாகனம் மோதி மயில் படுகாயம்


வாகனம் மோதி மயில் படுகாயம்
x
தினத்தந்தி 17 March 2023 12:30 AM IST (Updated: 17 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே வாகனம் மோதி மயில் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

ேவடசந்தூா் அருேக நான்கு வழிச்சாலையில், லட்சுமணன்பட்டி நால்ரோடு பிரிவு அருகே ஆண் மயில் ஒன்று நேற்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதைக்கண்ட நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர்கள் பிரகதீஸ்வரன், விஜய்கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் அந்த மயிலை மீட்டனர். பின்னர் அந்த மயில், திண்டுக்கல் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமணன்பட்டி நால்ரோடு எதிரே, மாரம்பாடி செல்லும் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் படுகாயம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.


Related Tags :
Next Story