நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரகசிய வாக்குமூலம்


நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரகசிய வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி பலாத்கார சம்பவம்: நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரகசிய வாக்குமூலம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவரும், மாணவியும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் மாணவரை கத்தியால் குத்தியதோடு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 3 மர்ம நபர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதோடு சந்தேகத்தின்பேரில் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் இதுவரையிலும் இச்சம்பவத்தில் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இதனால் அப்பள்ளி மாணவர், மாணவி ஆகியோர், போலீசாரிடம் அளித்த புகார்கள் உண்மைதானா அல்லது தங்கள் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக பொய்யான தகவல் ஏதேனும் கூறியுள்ளனரா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டறிவதற்காக போலீசாரின் பரிந்துரைப்படி விழுப்புரம் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராதிகா முன்னிலையில் அம்மாணவி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்தார். இந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை கோர்ட்டு அனுமதியுடன் பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story