கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அம்பையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

அம்பை:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சுமார் 15 பேர் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story