கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்


கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
x

மத்திய அரசின் தூய்மையே சேவை இந்தியா திட்டத்தின் மூலம் கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

கிராமசபை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வளர்மதி கலந்துகொண்டு காந்தி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கிராம கணக்குகளை ஆய்வு செய்தார். மேலும் கிராமத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து வாசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தூய்மையாக

மத்திய அரசின் தூய்மையே சேவை குப்பையில்லா இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைத்து நமது கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் இந்தப்பகுதியில் அதிகம் நடக்கிறது. எனவே பெண் பிள்ளைகளுக்கு தனது சொந்த காலில் நிற்க கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றுவதாக கூறினார். முன்னதாக பல்வேறு துறையின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

கூட்டத்தில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story