கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு


கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
x

நிலக்கோட்டையில் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேற்கு பகுதியில் வைகை ஆற்றில் மர்மநபர்கள் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ைவகை ஆற்றி ஒட்டி மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மர்மநபர்கள் மணல் மற்றும் சவுடு மண்ணையும் அள்ளி சென்றனர். சாலையை துண்டித்து மணல் அள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் மணல் அள்ளிய பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள் வருவதை அறிந்து, மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.


இந்தநிலையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம், சித்தர்கள்நத்தம் கிராம நிர்வாக அலுவலகம், நிலக்கோட்டை கோர்ட்டு, பிள்ளையார்நத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராம மக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், அணைப்பட்டி வைகை ஆற்றில் இரவு-பகலாக மணல் அள்ளுவதாகவும், அதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் ஒட்டிய சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.





1 More update

Next Story