வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது நீக்க பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டன


வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது நீக்க பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டன
x

தோவாளை தாலுகா அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது நீக்க பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டன

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்.

பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதும் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய பழுதுகள் இருந்தது. அதனை சரி செய்வதற்காக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் விஜய பிரபா ஆகியோர் முன்னிலையில் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு லாரிகளில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 1,315 வி.வி. பேட்கள், 92 கண்ட்ரோல் யூனிட்டுகள், 32 மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் 3 கன்டெய்னர்கள் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story