தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்தது


தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள குறும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னழகு. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது அந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழை காரணமாக வீட்டின் ஒரு பக்க சுவர் சேதமடைந்து நேற்று அதிகாலையில் வெளி பக்கமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டை நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னழகு கோரிக்கை வைத்துள்ளார்.

1 More update

Next Story