சுவர் இடிந்து விழுந்து 5 பசுமாடுகள் பலி
சுவர் இடிந்து விழுந்து 5 பசுமாடுகள் பலியானது.
திருவண்ணாமலை
செங்கம்
சுவர் இடிந்து விழுந்து 5 பசுமாடுகள் பலியானது.
செங்கத்தை அடுத்த அந்தனூர் ஊராட்சி கொல்லகொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் குப்பு. விவசாயியான இவர் மாடுகள் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மழையின் போது வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. இதில் 5 பசுமாடுகள் உயிரிழந்தன. மேலும் 2 பசு மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றது.
இந்த சம்பவம் தெரிவித்தும் வருவாய்த்துறை மற்றும் கால்நடை துறையில் இருந்து எந்த அலுவலர்களும் வந்து பார்வையிடவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story