மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x

அறச்சலூர் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தாய்- மகன் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.

ஈரோடு

ஊஞ்சலூர்

அறச்சலூரை அடுத்த தலவுமலை வெள்ளிக்கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இறந்துவிட்டார். இவருடைய மனைவி பருவதம் (வயது 60). இவர்களுடைய மகன் தனபால் (32). மாற்றுத்திறனாளி. பருவதம், தனபால் மற்றும் பருவதத்தின் சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் மண் சுவரால் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அறச்சலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன்காரணமாக பருவதத்தின் வீட்டு சுவர் மழையில் நனைந்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் அவருடைய வீட்டின் மண் சுவர் பின்புறமாக இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த பருவதம் அவரது மகன் தனபால், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் அவருடைய வீட்டின் பின்புறம் இருந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான 4 இருசக்கர வாகனங்கள், மூன்று சைக்கிள், பீரோ, புதிதாக செட் அமைப்பதற்காக வாங்கி வைத்திருந்த 60 தகர சீட்டுகள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. மேலும் வீடு இடிந்து விழும் சத்தம் கேட்டு சந்திரசேகரின் மகன் இளைய பிரகாஷ் (18) அருகில் சென்று பார்த்தார். அப்போது அவருடைய காலின் மீதும் சுவர் விழுந்தது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.


Next Story