உடைந்து தொங்கும் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர்
கிணத்துக்கடவில் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர் உடைந்து தொங்குவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர் உடைந்து தொங்குவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு கிணத்துக்கடவு தாலுகா கடந்த 2012 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 22 -ந் தேதி தொடங்கப்பட்டது. அப்போது முதல் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கிணத்துக்கடவு தாலுகாவில் கிராமங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைக ளுக்காக தினசரி கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர்.
சுற்றுச்சுவரில் விரிசல்
இந்த நிலையில் தாலுகா அலுவலகத்தில் முன்பக்க நுழைவு வாசல் சுற்றுச்சுவர் உடைந்து விரிசல் ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. பல நாட்கள் ஆகியும் அதை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்துக்கு அச்சத்துடன் வருகின்றனர். எனவே உடைந்து விரிசலுடன் இருக்கும் சுற்றுச்சு வரை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.