வீட்டின் மாடி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி


வீட்டின் மாடி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
x

வீட்டின் மாடி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியானாள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் ஊராட்சி புதுமனை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் வர்ஷினி (வயது 3). வர்ஷினி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென வீட்டின் மாடி தடுப்பு சுவர் இடிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வர்ஷினி மீது விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story