முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

தேனி

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. தற்போது இந்த அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் 2-ம் போக நெல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 167 கன அடியாக இருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைய தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 140.40 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 481 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- பெரியாறு 16, தேக்கடி 7.2, கூடலூர் 3.4, உத்தமபாளையம் 1.6, சண்முகா நதி 6.8, போடி 15.2, வைகை அணை 8.6, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 29, அரண்மனைபுதூர் 12.8, ஆண்டிப்பட்டி 18.2.


Related Tags :
Next Story