சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8½ அடியாக உயர்ந்தது


சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8½ அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8½ அடியாக உயர்ந்தது. இதனால் கோடையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8½ அடியாக உயர்ந்தது. இதனால் கோடையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் 100 எம்.எல்.டி. (10 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும்.

அணையின் பாதுகாப்பு கருதி 45 அடிக்கும் மேல் தண்ணீரை தேக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை. சில நேரத்தில் 42 முதல் 45 அடியை தாண்டிவிட்டாலே அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீரை திறந்து விட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் 5 அடி அளவுக்கு தண்ணீர் இழப்பு ஏற்படுகிறது.

குடிநீர் வினியோகம்

மேலும் கோடை யில் சிறுவாணி அணையின் குடிநீர் வினியோ கத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த அணையில் நீர் மட்டம் 50 அடியை தொட்டால் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி கோவை மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும். அதற்கு கேரள அதிகாரிகள் அனுமதிக்காததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சரியாக கோடை மழை பெய்யாததால் கடந்த மாதம் 9-ந் தேதி நிலவரப் படி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக இருந்தது. கடந்த 25-ந் தேதி 5½ அடியாக குறைந்தது.

வால்வு வெளியே தெரிந்தது

இதனால் சிறுவாணி அணையில் இருந்து நீர் எடுக்க உதவும் 3-வது வால்வு வெளியே தெரிந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை நன்றாக பெய்தது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கோவையில் கோடை காலம் முடியும் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு வராது

சிறுவாணி அணையில் தண்ணீரை உறிஞ்சி எடுக்க 4 வால்வுகள் உள்ளன. அதில் 3 வால்வுகள் கீழ்நோக்கியும், 4-வது வால்வு மேல்நோக்கியும் இருக்கும். தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் 3-வது வால்வு வெளியே தெரிகிறது.

கடந்த 1-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5½ அடியாக இருந்தது. 1-ந் தேதி இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து உள்ளது. ஒரே நாளில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

ஆனால் அணையின் அடிவாரத்தில் 44 செ.மீ. மழை பதிவானது. இதனால் அணையின் நீர்மட்டம் 5.44 அடியில் இருந்து 8½ அடியாக உயர்ந்து உள்ளது.

பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து 40 எம்.எல்.டி. (4 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடை மழை ஓரளவுக்கு கை கொடுத்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story