மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது


மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது
x

வனப்பகுதியில் மழை இல்லாததால் மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது.

தேனி

கடமலைக்குண்டு:

கடமலைக்குண்டு அருகே கோம்பைதொழுவில் 'சின்ன சுருளி' என்று அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. மேகமலை வனப்பகுதியில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில வாரங்களாக மேகமலை வனப்பகுதியில் மழை இல்லாததால் மேகமலை அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் மேகமலை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் மேகமலை வனப்பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் குறைந்தளவு விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர்.


Next Story