பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது


பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது
x

கோடை வெயில், மழை பொய்த்ததால் பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

கோடை வெயில், மழை பொய்த்ததால் பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம் அணை திகழ்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும், வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

15.5 அடி நீர்

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 15.5 அடியாக உள்ளது. அணைக்கு 20.544 கன அடி நீர்வரத்தும், 25 கன அடி நீர் வெளியேற்றவும்படுகிறது. இதனால் அணை பகுதி பெரும்பாலும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கும் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே கோடை மழை பெய்தால் மட்டுமே பிசான பருவ சாகுபடியை தொடங்க முடியும் என்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story