மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்தது


மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்தது
x

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்து உள்ளது.

கரூர்

கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதன் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ள நீர் சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அந்த தண்ணீர் இரவு கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் வந்தடைந்தது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி நோக்கி செல்கிறது. காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தால் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story