கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு


கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு
x

குத்தாலத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கணவன்-மனைவி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியை சேர்ந்தவர் குணசீலன்(வயது 74). இவருடைய மனைவி தமிழரசி(68). இவர்களுக்கு திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது.இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

சாவிலும் இணைபிரியவில்லை

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். 48 ஆண்டுகள் தனது வாழ்வில் இரண்டற கலந்து தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது கணவர் இறந்ததால் தமிழரசி துடித்துப்போனார்.தனது கணவர் தன்னை விட்டுச்சென்ற துக்கம் தாங்காமல் அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழரசியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கிராமமே சோகத்தில் மூழ்கியது

இதனை அடுத்து இந்த தம்பதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்து இருவரின் உடல்களையும் அடக்கம் செய்தனர்.கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது.


Related Tags :
Next Story