கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்


கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:45 PM GMT)

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகள் ஜோதி(வயது 45). இருளர் சமூகத்தை சேர்ந்த இவருக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு வீடு கடந்த 30.11.2021-ல் வழங்கப்பட்டுள்ளது. இவர் இத்திட்டத்தில் பெற்ற வீட்டை கீழ்மட்ட அளவில் கட்டியுள்ளார். இவருக்கு வங்கியில் செலுத்த வேண்டிய முதல் தவணை தொகையான ரூ.26 ஆயிரத்தை வேறு ஒருவரின் வங்கிக்கணக்கில் செலுத்தி நூதன முறையில் ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு மாவட்ட விழிப்பு கண்காணிப்புக்குழு உறுப்பினர் அகத்தியன், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவருக்கு விரைவில் உதவி செய்ய கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Related Tags :
Next Story