பெண் மர்மச்சாவு


பெண் மர்மச்சாவு
x

பெண் மர்மச்சாவு

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

மர்மச்சாவு

சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள விளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது37). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வானதி (33). இவர்களுக்கு கோகுல் (9), ரக்சிதா (6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். வானதி தனது குழந்தைகளுடன் மாமியாருடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் மாமியார் தனது மகள் வீட்டிற்கு பேராவூரணி சென்றுவிட்டார். நேற்றுமுன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்த கோகுல் திடீரென கண் விழித்து பார்த்த போது, வானதி தரையில் மயங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து கோகுல் அதிர்ச்சி அடைந்தான். மேலும் வானதி அருகே ஒரு கயிறும், அவர் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட ஒரு தடயமும் இருந்துள்ளது.

தடயங்கள் சேகரிப்பு

தகவல் அறிந்ததும் சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார் உடனடியாக தடயவியல் துறை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சையிலிருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் வானதி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் வானதி தந்தை ராமநாதன்(55) புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்து கயிற்றில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story