கோவிலில் திடீரென மயங்கி விழுந்த பெண்... கவர்னரே முன்வந்து முதலுதவி - நெகிழ்ச்சி செயல்

கோவிலில் திடீரென மயங்கி விழுந்த பெண்... கவர்னரே முன்வந்து முதலுதவி - நெகிழ்ச்சி செயல்
x

கோவிலில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

கன்னியாகுமரி,

கோவிலில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் கோவில் வளாகத்தில் உள்ள மேலாளர் அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது கோவிலில் இருந்த புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மீனாதேவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

1 More update

Next Story